Activity

Average numbers for the latest postings:

6 comments per posting'Current posts' means the last 50 posts that are at the most 4 weeks old. So this metric gives a picture of how many comments someone has received recently.
0 reshares per posting'Current posts' means the last 50 posts that are at the most 4 weeks old. So this metric gives a picture of .how often someone's posts have been reshared lately.
8 +1's per posting'Current posts' means the last 50 posts that are at the most 4 weeks old. So this metric gives a picture of how many +1's someone has received on his or her posts recently.
1,661 characters per posting'Current posts' means the last 50 posts that are at the most 4 weeks old. So this metric gives a picture of how many characters someone has used per post recently.

Latest postings

2013-05-16 17:19:26 (33 comments, 0 reshares, 13 +1s)

பஷீர், கே.ஜி.ஜார்ஜ், பரதன், ஓ.வி இன்னும் யார்?... இன்னும் யார் ??...ஓகே நிறைய பேர்.... ஐ லவ் கேரளா மேன்.... சீரியஸ்லி. என்னா! ஸ்டேட். என்னா! மக்கள். நான் நேர்லயே போய் பாத்திருக்கேன். ஒரு சினிமா ஆளுமை ஆளரவமற்ற ஒரு வீட்டில நியூஸ் பேப்பர் வாசிச்சிட்டிருக்க சித்திரத்த நான் எழுதினேனே. மை காட். யூ ஆர் ஆல் டமில் ரீடர்ஸ். கொஞ்சம் ஆழமான விஷயங்கள நீங்க எலிமையா தாண்டிபோய்டுவீங்கதானே , i believe u never read those .  forget ab't this. என்னை அய்யனாரை  படிக்கிறதா ஒரு விஷயம்!? நான் சொல்ல வந்ததது வேற.. என்னோட கோபம் எரிச்சல் fuck forget abt this... இத மனசுல வச்சுக்காதீங்க நான் சொல்ல வந்தது கேரளம் பத்தி. தே ஆர் த பெஸ்ட். ஐ ஷ்யூர். டேம்ன் ஷ்யூர் அபவுட் திஸ். ராசு அண்ணன் நாடோடி தடங்களில கேரளத்தையும் பார்ப்பனியர்களையும் ஒரே கோட்ல வச்சிருப்பார். அதுவும் ஒருபார்வை. ஆனா அப்படி கிடையாதுங்கிறதும் வேற. ஆனா யூ நோ கைஸ். ராசு அண்ணன் க்ரேட். பெரிய விஷயத்த அசால்டா பண்ணியிருக்கார். ஆக்சுவலி இன்னிக்கு அவரோட புக்க பத்தி பேசனும்னுதான... more »

posted image

2013-05-16 16:17:33 (0 comments, 0 reshares, 2 +1s)

தேவதாரு பூத்து என் மனசின் தாழ் வரையில்

Devatharu Poothu...singers - P.Susheela & Shyam... Music - SHYAM

posted image

2013-05-16 14:26:24 (0 comments, 0 reshares, 3 +1s)

நீலகண்டப் பறவையைத் தேடி

2013-05-16 05:52:45 (14 comments, 0 reshares, 7 +1s)

மரியான் இசை கேட்டேன். பாடல்கள் மொத்தமும் எழுதியது குட்டி ரேவதி யா? வழக்கமான வரிகளாகத்தான் தோன்றியது. இசையும் பெரிதாய் ஈர்க்கவில்லை. திரும்பத் திரும்பக் கேட்கையில் நெஞ்சே எழுவையும், எங்க போன ராசா வையும் பிடித்துப் போகலாம். கடல், நீர்ப்பறவை இதற்கு முன் வந்த கடலோர சினிமாக்கள் தந்த அயற்சியோ என்னவோ மரியான் மீது அவநம்பிக்கையே அதிகம்இருக்கிறது. ஜோடி. குருஸ், தனுஷ் என நம்பிக்கையூட்டும் ஆட்கள் இருந்தாலுமே கூட தமிழில் மீனவர்கள் வாழ்கைச் சித்திரம் சரியாகப் பதியப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை. பரதனின் அமரம் என்கிற காவியத்தை மீறி  இந்தக் களத்தில் புதிதாய் ஏதாவது செய்துவிட முடியுமா என்ன? மம்மூட்டி - யின் ஆகச் சிறந்த நடிப்பு, முரளிக்கும் மம்மூட்டிக்குமிடையேபின்னப்பட்ட நட்பு. பரதனுக்கே உரிய தனித்தன்மைகளுடன் செதுக்கப்பட்ட நாயகியான மது. அவளின் பாவாடை சட்டை. ஹப்பா!  மரியான் முழுவதுமாய் அல்ல அமரத்தின் கிட்டே நெருங்கி வந்தால் கூட போதும்.  தமிழ் சினிமாவில் கடல்கள் உருவாக்கிய கறைய கழுவி வி... more »

2013-05-16 04:02:31 (3 comments, 0 reshares, 8 +1s)

கூகுள் ப்ளஸ் ஆயாவிற்கு ஜீன்ஸ் மாட்டி விட்டது யார் யா?

posted image

2013-05-15 08:09:24 (6 comments, 0 reshares, 4 +1s)

இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம் : நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை முன் வைத்து

2013-05-14 06:53:16 (6 comments, 0 reshares, 8 +1s)

நூறு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்திருக்கிறது. இந்த மட்டில் உங்களுக்கு என் நன்றி தேவதேவன் :)                                                                                                        நீர்ச் சுனை

பாறை ஒன்றின்
கானகத்
தனிமை மீதமர்ந்து
சுருண்டு
தன்னை
தன் நாவாலே நக்கித்
தூய்மை செய்துகொண்டிருந்த
ஒரு நாய்க்குட்டி என
குபுகுபு வென
ஒரு சின்னஞ் சிறிய
நீர்ச்சுனை.... more »

2013-05-13 10:12:29 (0 comments, 0 reshares, 11 +1s)

Kai po che  பழைய கிரிக்கெட் நினைவுகளைத் தூர் வாரி விட்டது. சிறு நகரப் பதின்மர்களிடையே நிலவும் நட்பு கொஞ்சம் விசேஷமானது. ஆழமானது. பெருநகர/கிராமப்புற நட்பைக் காட்டிலும் கூடுதலான உணர்வுப்பூர்வத்தைக் கொண்டிருக்குமென்றே நம்புகிறேன். அல்லது எனக்கு அப்படி நேர்ந்தது. இஷான் போலவே எனக்கொரு நண்பன் இருக்கிறான். அவனுக்கு கிரிக்கெட்டைத் தவிர எதுவுமேதெரியாது. எப்படி பால் போட்டாலும் அடிப்பான். நல்ல பெளலர். பிரமாதமான ஃபீல்டர். திருவண்ணாமலையில் இவனைத் தெரியாத கிரிக்கெட் டீமே கிடையாது. எந்த மூலைக்கு சென்று இவன் பெயரைச் சொன்னாலும் கிரிக்கெட் பிரியர்கள் சற்று மிரளுவார்கள். டவுன் டீமில் விளையாடினான். சில உயரங்களுக்கு சென்றிருக்க வேண்டியவன். தேங்கிவிட்டான். இந்தக் கிரிக்கெட் பைத்தியம்எனக்கும் என் மற்ற நண்பர்களுக்கும் பதினெட்டு வயதோடு முடிந்துபோனது. அடுத்த சுவாரசியத்தை நோக்கி நகர்ந்து போனோம். பெண்கள், பியர், வேலை, பணம், புது நகரங்கள் இப்படியாய் நாங்கள் நகர, இவன் மட்டும் உள்ளூரிலேயே, கிரிக்கெட்டிலேயே நின்றுவிட்டான். ப... more »

2013-05-12 05:54:42 (11 comments, 0 reshares, 18 +1s)

வட்டார வழக்கின் மீது முழு அக்கறையுள்ள ஒரே தமிழ் இயக்குனர் வெற்றிமாறன் தான் என அடித்துச் சொல்லிவிடலாம். வடசென்னை, மதுரை – க்குப் பிறகு பெங்களூர் நகரத்தை/ வாழ்வியலை முழுமையாய் திரையில் கொண்டு வந்திருக்கிறார். கிருஷ்ணகிரி-ஓசூர்-பெங்களூர் பகுதிகளில் ஆறு வருடங்களுக்கும் மேல் வசித்திருப்பதால் உதயம் திரைப்படத்தை இன்னும் நெருக்கமாக உள்வாங்கமுடிந்தது. பெங்களூர் வாழ் தமிழர்கள் பேசும் தமிழைக் கேட்கும்போதே சிரிப்பு வந்துவிடும். கிருஷ்ணகிரி – ஓசூர் பார்டரில் வசிக்கும் தமிழர்களின் பேச்சு வழக்கு இன்னும் பிரசித்தம். தமிழ் - தெலுங்கு- கன்னடம் - ஆங்கிலம் எல்லாவற்றையும் பிய்த்துப் போட்டு (தமிழை சற்று கூடுதலாக), ஒரு கலக்கு கலக்கி, பெரும்பான்மை காரணமாக மேலே மிதந்து வரும் தமிழைப் பேசிக்கேட்பது  புதுமையான அனுபவமாக இருக்கும். கிருஷ்ணகிரியில் படிக்கும்போது அங்கிருந்த கிராமங்களில் தங்கியிருந்தேன். கிராமவாசிகள் பேசும் தமிழென்பதால்  இன்னும் கலங்கலாக நொப்பும் நுரையுமாய் காதில் பாயும். இந்தக் கலங்கல் தமிழ், திரைப்படத்தில் பிசிறு தட்டா... more »

2013-05-09 11:09:58 (7 comments, 2 reshares, 23 +1s)

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்பது ஒரு பெண்ணை மட்டுமே காதலிப்பதல்ல. மொத்தமாய் காதலுணர்வாய் மாறுவது. அப்படி முழுக்க காதலாய் மாறாத வரை இன்னொருத்தரை நேசிக்க முடியாதெனத்தான் தோன்றுகிறது. பெண் பிரபஞ்சத்தின் சகல இரகசியங்களுக்கும் திறப்பாய் இருக்கிறாள். எல்லா அறிதலுக்குமான துவக்கம் பெண்தான். அறியமுடியாமையின் எல்லையும் பெண்ணாக இருக்க கூடும்.இந்த மழைக்காலத்தின் மாலை நேரத்தை, மின் விளக்குகள் சன்னமாய் ஒளிரும் பச்சைப் பசும் பூங்காவை, அகலமான சுத்தமான கடற்கரை சாலைகளை, புராதனத்தின் வாசனையை கட்டிடங்களிலும் நிசப்தத்திலும் சேமித்து வைத்திருக்கும் வீதிகளை, கூப்பிடு தூரத்தில் கேட்டுக் கொண்டே இருக்கும் அலை சப்தத்தை, இன்னும் எதிர்ப்படும் சிறார்களை, முதியோர்களை, வீதி நாய்களை, சாக்கடைகுழாய்களில் ஒளியும் உடல் சிறுத்த பூனைகளை, இன்னும்.. இன்னும்… கண்ணில் படும், காதில் விழும், சரியாய் சொல்லப்போனால் புலன்கள் உணரும் அத்துணையும் வசீகரமாகவும், தனித்த அழகாகவும் தோன்ற ஆரம்பிப்பது காதல் வயப்படும் மனதிற்கு மட்டும்தான். ... more »

posted image

2013-05-07 17:16:21 (0 comments, 0 reshares, 4 +1s)

Nandu Movie Song - Kaise Kahoon (Hindi Song) - Ilaiyaraja

posted image

2013-05-04 19:18:34 (1 comments, 0 reshares, 6 +1s)

கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல?.. Kanavu Onru Thonrudhe - Oru Odai Nadhiyagiradhu

2013-05-04 19:15:14 (0 comments, 0 reshares, 2 +1s)

என் தேகம் அமுதம்.. en dEgam amudham - oru Odai nadhiyaagirathu (1983)

posted image

2013-05-01 17:30:08 (0 comments, 0 reshares, 6 +1s)

காலையில் நினைவிற்கு வந்த குறும்படம் - கார்த்திக் சுப்புராஜின் காட்சிப்பிழை காட்சிப்பிழை - Parallax - A short film by Karthik Subbaraj

2013-04-18 09:57:36 (5 comments, 0 reshares, 5 +1s)

நான் வாசித்ததிலேயே மிகச் சிறந்த சினிமா விமர்சனம் இதுதான் :)) 
After the Christmas thing was over, the goddam picture started. It was so putrid I couldn't take my eyes off it. It was about this English guy, Alec something, that was in the war and loses his memory in the hospital and all. He comes out of the hospital carrying a cane and limping all over the place, all over London, not knowing who the hell he is. He's really a duke, but he doesn't know it. Then he meets this nice, homey, sincere girl getting on a bus. Her goddam hat blows off and he catches it, and then they go upstairs and sit down and start talking about Charles Dickens. He's both their favorite author and all. He's carrying this copy of Oliver Twist and so's she. I could've puked. Anyway, they fell in loveright away, on account of they're both so nuts about Charles Dickens and all, and he helps her r... more »

2013-04-15 07:04:32 (7 comments, 0 reshares, 34 +1s)

நன்றி நண்பர்களே. Face book தோழமைகளுக்கும் இப்போதே நன்றி சொல்லிவிட மனம் துடிக்கிறது துரதிர்ஷ்டவசமாக அலுவலகத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது மாலை வரை காத்திருக்கவேண்டும். அதுவரை இந்த நன்றியை சுமந்துகொண்டிருப்பது பெரிய பாரம்தான். நான்கு நாட்களாக இணையத்தை திறக்கவில்லை. புதன் கிழமை காலையோடு சரி. அன்று ப்ளஸ் கனத்து வீங்கிப் போயிருந்தது. இதன் மீதுஎனக்கு பயங்கர கிண்டல். ஒரே அங்கிள்ஸ் ஆண்டிகள் மயம். மொத்தமாய் முப்பது பேர் இதைப் பார்ப்பார்களா? ரீதியிலான கிண்டல்கள். ஆனால் புதன் கிழமை காலை இங்கிருக்கும் மனிதர்கள் மீது தனி வாஞ்சை மேலெழுந்தது. அன்று இரவு மணிஜி கனவிலும் வந்தார். வியாழக்கிழமை காலை அலுவலகம் போகப் பிடிக்கவில்லை. கோபிகிருஷ்ணனின் மொத்த தொகுப்பு பிரிக்கப்படாமல் இருந்தது.பயல்கள் எழும் வரை பிறழ்வு குறுநாவலையும் இன்னும் சில கதைகளையும் வாசித்தேன். எழுந்தவன் என்னைப் பார்த்துவிட்டு “நீ ஆபிஸ் போலயா? அப்ப நானும் ஸ்கூல் போலப்பா” என்றான். “ரைட்டு விடு” என மூவரும் நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருந்தோம். பிஞ்சுகளின் முத்தங... more »

2013-04-07 07:05:20 (1 comments, 0 reshares, 6 +1s)

சாரு, பருத்திவீரனின் Ethnic தன்மையை சிலாகித்து Jorge Sanjinés என்கிற பொலிவிய இயக்குனரின் படங்களோடு பருத்திவீரனை ஒப்பிட்டிருப்பார். நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் jorge ன் படங்களை இணையத்தில் தேடிப் பார்ப்பேன். ஏமாற்றம்தான் மிஞ்சும். நேற்று அதிர்ஷ்டவசமாக 1969-ல் வெளிவந்த blood of condor –ன் டோரண்ட் கிடைத்தது. ஆனால் கடவுளைப் போல  ஒரே ஒரு seeder தான் இருக்கிறார்.யாரிடமாவது இவரின் படங்கள் இருந்தால் seed-ங்கள்.

டோனி காட்லிப், எமீர் கஸ்தூரிகா போன்றவர்களின் மீது பைத்தியம் பிடித்துத் தொலைவதற்கான காரணங்களில் இந்த இனக்குழு அடையாளமும் ஒன்று. அவர்களின் சினிமா என்பது அவர்களுடைய/ அவர்களுக்கான சினிமா மட்டும்தான்.  அதில் இருக்கும் ஆழமான உண்மை மட்டுமே அதை உலகிற்கான சினிமாவாக மாற்றுகிறது. ஆக நம்முடையஇலக்கு, உலக சினிமா அல்ல பிராந்திய சினிமா மட்டும்தான். எனக்கு என்னவோ ராமராஜன் படங்களை சற்றுத் தட்டினாலே பிராந்திய சினிமா கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.... more »

2013-04-07 06:06:47 (5 comments, 0 reshares, 13 +1s)

புழுதி சூழ்ப் பகலை 
வெறுத்துத் தூங்கிப் போன 
வெள்ளைச் சூரியன்
நள்ளிரவில் 
செந்நிறமாய் 
விழித்துக் கொண்டது
பச்சை நதியின் ஆழத்திலிருந்து
மேலெழுந்த ஆமை
தகிக்கும் இரவின்  நிறம் பார்த்துப்
பதறி
மீண்டும் தம் கால்களை 
பின்னசைத்து மூழ்கிப்போனது
அகாலப் பறவையின்
பைத்திய அலறலில்
கண் விழித்த
செந்நாய் கூட்டம்உற்சாகம் மிகுந்து
குதித்துக் களித்ததில்
மேலெழும்பியது இன்னொரு காலைப் புழுதி.... more »

posted image

2013-04-07 04:09:44 (0 comments, 0 reshares, 0 +1s)

Sci-Fi Stories by Kurt Vonnegut, Philip K. Dick, Neil Gaiman & Isaac Asimov added to our Free eBooks collection: http://is.gd/6PAkFJ 

posted image

2013-04-02 06:20:22 (0 comments, 0 reshares, 1 +1s)

ஆட்டிசம் எளிமையாக உணர சில வழிகள்

Easy way to find Autism

பகிருங்கள்.. பரவலாக்குங்கள்.

2013-03-31 07:59:21 (0 comments, 0 reshares, 29 +1s)

ஹரிதாஸ் பார்த்தோம். மிக அழுத்தமாக வந்திருக்க வேண்டிய படைப்பு. தமிழ் சூழல் மீதிருக்கும் பயம் காரணமாக பாதிவெந்திருக்கிறது. சில படங்கள் படைப்பாளிகளைத் தாண்டி சூழலின் மீது கோபத்தை வரவழைக்கும். ஹரிதாஸ் அப்படிப்பட்ட படம்தான். சிறுவன் ஒரு ஹீரோவின் மகன் என்பதால் அவனால் ஓரளவிற்கு இச்சீழ்பிடித்த சூழலிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால்சாமான்யர்களின் ஆட்டிசக் குழந்தைகள் என்னாகும் என்ற கேள்வி எங்களை வதைத்தது. பெரியவனை எங்களால் சமாளிக்கவே முடிந்ததில்லை. அறுந்த வால் என அவனைப் பார்ப்பவர்கள் எல்லாம் சொன்னாலும் அவனின் இயல்பிற்கு அது மிகவும் குறைவான சொல். இங்கிருக்கும் அவனின் வழக்கமான மருத்துவர் “பயலிடம் ஹைபர் ஆக்டிவிடி அதிகமாக இருக்கிறதே ட்ரீட்மெண்ட் எடுக்கலாமா?”எனக்கேட்டார். அன்றிலிருந்து அவரிடம் போவதை நிறுத்திக் கொண்டோம். துருதுரு வென இருந்தால்தான் குழந்தை என்பது என் ஆழமான நம்பிக்கை. அவ்வப்போது பயலின் சாகசங்களால் பெரிதும் அவதியுறுவோம் என்றாலும் மெல்ல மெல்ல அவன் அட்டகாசம் குறைந்திருக்கிறதுதான். இவ்... more »

2013-03-31 07:12:13 (71 comments, 0 reshares, 19 +1s)

ஊரிலிருக்கும்போது கற்றது தமிழ் ராமிடம் தொடர்ந்து உரையாட நேரமும் சந்தர்ப்பமும் வாய்த்தது. தமிழ் இலக்கியத்தையும் தமிழ் சினிமாவையும் எதிரெதிர் புள்ளிகளில் வைத்து பேசிக் கொண்டிருந்தோம். சினிமாக்காரன் இலக்கியத்தில் தேர்ந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதுதான் இலக்கியத்தில் தேர்ந்த சினிமாக்காரனான ராமின் பார்வை. ஆரம்பத்திலேயேஇந்தப் பார்வையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இது, ஒன்றைக் கடந்துவிட்டால் அதை நிராகரிக்கும் மனதின் விளையாட்டு. இதே மனநிலையை கொண்டுள்ளவன் என்பதால் தொடர்ந்து பேச்சை முன்னெடுக்க முடிந்தது. ராமின் பார்வையில் தமிழ் இலக்கியம் கதாபாத்திர வலுவின்மை இல்லாதது. வெறும் விவரணைகளை மட்டுமே கொண்டது. உரையாடலுக்கான இடமே இல்லாதது என்பன போன்றவற்றைஜோடி குரூஸ், ஜிநாகராஜன், கோபிகிருஷ்ணன்,சிங்காரம் போன்றோர் உதவியுடன் மறுக்க முடிந்தது. ஆனால் தமிழ் இலக்கியம் தமிழ் சினிமாவிலிருந்து பெற்றுக் கொள்கிறது என்பதாய் பேச்சு நகர்ந்தபோது ராம் சொன்னவற்றை என்னால் மறுக்கமுடியவில்லை. விக்ரமன் படங்களில் வெளிப்படும் மிக... more »

2013-03-21 10:10:52 (0 comments, 0 reshares, 4 +1s)

"Listen, if by chance you prove to be right
and you meet God... I don't believe that this is going to happen, because there is no God in my conception,
but you insist that there is a God, so do at least a little service for your brother. Just tell your God, `My
brother wants to get out of this existence. You have bored him enough.'"

-Fyodor Dostoyevsky in  THE BROTHERS KARAMAZOV

posted image

2013-03-19 08:21:01 (0 comments, 0 reshares, 11 +1s)

/எம்ஜிஆர் மட்டும்தான் இல்லை. அவர் இருந்திருந்தால் அந்த மக்களை காப்பாற்றியிருப்பார்/  A Perfect Review, well done athisha http://www.athishaonline.com/2013/03/blog-post_19.html 

posted image

2013-03-18 08:56:10 (0 comments, 0 reshares, 2 +1s)

http://abedheen.wordpress.com/2013/02/28/hanifakka-cycle/

posted image

2013-03-18 08:37:13 (8 comments, 0 reshares, 2 +1s)

Attn: லக்கி & அதிஷா. 

http://othisaivu.wordpress.com/2013/03/17/post-180/

2013-03-17 07:14:57 (6 comments, 0 reshares, 11 +1s)

எமீர் கஸ்தூரிகாவின் Black cat White Cat மற்றும் Underground படங்களை நேற்றும் முன் தினமும் கிடைத்த இடைவெளிகளெல்லாம் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். Underground ன் ஆரம்பக் காட்சியே அசரடித்தது. இப்படி ஒரு Grand Opening உள்ள சினிமா அபூர்வம். நள்ளிரவில் வெண்கல Band வாத்தியங்கள் முழங்க சாரட் வண்டியில் ப்ளாக்கியும் மார்க்கோவும் மரணகுடி குடித்துவிட்டுதுப்பாக்கியால் சுட்டபடி வீடடையும் காட்சி. அடேயப்பா. Underground முழுக்க எமீர் காட்டான்  களை காட்டுத்தனமாய் காட்சிப்படுத்துகிறார். ப்ளாக் கேட் வைட் கேட்டில் இந்த காட்டான் களை சாதுர்யமானவர்களாகவும் காட்சிப்படுத்துகிறார். அதே நேரத்தில் ஒரு மூடக் காட்டானும் உண்டு. எமீரின் மொத்த படங்களின் உருவாக்கமும் இப்படித்தான், கதாபாத்திரங்களுக்குமிகப்பெரிய அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆனால் பார்வையாளர்களாகிய நாம் அதை புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருப்போம். கூடவே 4 Months, 3 Weeks and 2 Days என்றொரு ரோமானியப்படத்தையும் பார்த்தேன்.... more »

2013-03-14 07:57:48 (3 comments, 0 reshares, 2 +1s)


Man's misfortune is this -- that the father is not interested in the child's potentiality. He is interested in
his own investment. He would like the child to be part of his business, of his religion, of his politics, of his
ideology. The mother is not interested in the child's development because that's an unknown factor. It is not
as simple as a bird's; man is a complex being, multi dimensional. The child is capable of becoming so many
things, but the mother has her own investment -- she would like the child to become someone in particular. I
Man's parents, because of their own investment -- business, politics, religion, philosophy -- are less
interested in the potential of the child. They are more interested in how to mold the child so that he fits in
their world, becomes respectable in their world, is not an outcast, is not a misfit.... more »

posted image

2013-03-14 06:55:41 (1 comments, 0 reshares, 11 +1s)

உயிரியல்படி மகன் தாயின் இரண்டாம் கணவனே. தன் மனைவியின் இரண்டாம் கணவனை எந்த அப்பா சகித்துக் கொள்வார்? தன் மனைவியை இன்னொருவன் அனுபவிப்பதான மனநிலையையே மகனும் எதிர்கொள்கிறான். இரண்டு கணவர்களுக் கிடையிலான போராட்டம்தான் அப்பாவுக்கும் மகனுக்குமிடையே நடக்கிறது. அம்மா, மனைவி என்றெல்லாம் சமூக அமைப்பில் வேறுபடுத்திப் பார்க்க முடியுமெனினும்உயிரியலின் தூண்டுதல்களுக்கு அதெப்போதும் உதவிகரமாக இருந்ததேயில்லை என்பதாலேயே பருவமடைந்த ஆண்குழந்தைகளை அம்மாவுடனும், பெண் குழந்தைகளை அப்பாவுடனும் உறங்க நாம் சம்மதிப்பதேயில்லை. நிஜம் நாமனைவரும் அறிந்த ஒன்றாக இருப்பதன் பிரதிபலன்தான் இது. மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதை, தந்தையை விட தாயேதுரிதப்படுத்துகிறாள். மகனை வெளியே அனுப்பிப் படிக்க வைப்பதிலும் திருமணம் செய்வதிலும் அவசரப் படுத்துவதில் முதலிடம் தந்தைக்கே. இதன் பின்னிலுள்ள மனோதத்துவத்தைத் தெரிந்து கொள்ளும் போதுதான் நாம் அதிர்வின் விளிம்பில் நிற்கிறோம். http://bavachelladurai.blogspot.com/2013/03/... more »

posted image

2013-03-14 06:18:04 (2 comments, 0 reshares, 1 +1s)

http://udhayasankarwriter.blogspot.com/2013/03/blog-post_13.html

posted image

2013-03-11 13:21:57 (0 comments, 0 reshares, 2 +1s)

posted image

2013-03-11 13:21:15 (0 comments, 0 reshares, 3 +1s)

posted image

2013-03-10 15:11:26 (0 comments, 0 reshares, 2 +1s)

posted image

2013-03-10 15:11:07 (5 comments, 0 reshares, 7 +1s)

2013-03-07 16:00:12 (4 comments, 0 reshares, 9 +1s)

கனாத் தழுவல்
 
மாலைச் சூரிய கிரணம் போல்
தகதகத்த
இரட்டை ஆண்மகவுகளை
இன்றதிகாலைக் கனாவில்
ஈன்றெடுத்தேன்
இப் பாலையின் சாலையோரம்
திடீரென முளைக்கும்
ஏற்கனவே பூத்த மரங்களைப் போல்
இருவரும் தரையில் விழுந்ததும்
எழுந்துநின்றுகுதித்துதாவிஓடிஆடி
நொடிக்கு நொடி பூப்பூவாய் விரிந்தனர்
நிலாத் தேய்ந்த இரவுகளில்
எதையோமீட்டெடுக்க வேண்டி
வற்றிய நதியின் மணற் புதைவுகளெங்கும்
அலைந்துவிட்டு திரும்புபவனின்
அரவம் கேட்டு
வாயிலுக்கு ஓடுகிறார்கள்
தொய்வடைந்த அவன் உடல் மீது
தாவுகிறார்கள்
கருவடைந்து குழிவிழுந்த அவன் முகத்தை
பூவிரல்களில் ஏந்தி முத்தமிடுகிறார்கள்
சோர்ந்து விழுந்து
உறங்கிப்போனவனின் உடலைத்
தம் பிஞ்சு மடியில் கிடத்தித்தலைக் கோதுகிறார்கள்
அலைகளற்ற சமுத்திரத்தில்
உருவான பேரலையொன்று
அவன் கால் நனைத்துப் போனதை
அறியாமலே உறங்கிப் போனான்
காலையில் சற்றுத் தாமதமாய்... more »

posted image

2013-03-07 15:25:40 (0 comments, 0 reshares, 4 +1s)

posted image

2013-03-07 15:25:22 (0 comments, 0 reshares, 3 +1s)

2013-03-06 10:43:57 (4 comments, 0 reshares, 20 +1s)

2.    இருபத்தோரு வயதில் Prodigal son ஐப் போலத்தான் என் சகோதரனிடம் திரும்பி வந்தேன். அந்தக் குளிர் நகரம் அக்காலகட்டத்தில் எனக்கான எல்லாவற்றையும் கொண்டிருந்தது. தனிமை வீடும் ஏராளமான புத்தகங்களும் பிடித்த வேலையுமாய் அந்நாட்கள் நகர்ந்தன. இலக்கியத்தோடு ஓஷோவும் புத்தகங்கள் கேசட்டுகள் வழியாய் அறிமுகமானார்.  தமிழில் வந்த இளைமைக்கால நினைவுகள், புல்தாமாகவே வளர்கிறது, வெற்றுப்படகு போன்ற புத்தகங்கள் ஓஷோவின் மீது பிடித்தத்தை ஏற்படுத்தின. The new man கேசட்டை திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்தேன். Individuality, Responsibility, Freedom குறித்தெல்லாம் மிகப் பெரிய திறப்பு ஒன்று எனக்குள் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக திருச்சி, கோவை,போபால்,குச்வாடா என பயணித்ததும் Swami Prem aika எனப் பெயர் வந்ததும் போதியமட்டில் புனைவாகவும்கட்டுரைகளாகவும் எழுதித் தீர்த்திருக்கிறேன். இதனோடே வேதாத்திரி மகரிஷி கும்பலோடும் நெருக்கமான தொடர்பிருந்தது. ஓசூரில் மனவளக் கலை மையத்திற்குப் போய் உடற்பயிற்சி, தியானம், அவ்வப்போது கோவில்களுக்குப... more »

2013-03-06 07:43:44 (9 comments, 0 reshares, 17 +1s)

என் அப்பாவிற்கு கடவுளர்கள் குறித்துப் பெரிதாய் புகார் கிடையாது. ஆகவே வீட்டில்  பக்தியின் தாக்கங்களான, பூஜை,பிரார்த்தனை, வழிபாடு,விசேஷங்கள் என எதுவும் இருந்தது கிடையாது. ஆனால் நான் பதின்மன் வரை பக்திப் பழமாகத்தான் வளர்ந்தேன். பதின்மத்திற்குப் பிறகு சாமியார் பித்தும் சேர்ந்துகொண்டது. போன மாதம் கூட ஒரு வளரும் சித்தரைப் பார்த்துப்பேசிவிட்டுத்தான் வந்தேன். இப்பித்திற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது என் ஊரைத்தான். இரமணர் ஆசிரமத்திற்கு சமீபமான வீடென்பதால் என் பள்ளி விடுமுறைப் பகல்கள் முழுக்க ஆசிரமமும் அதையொட்டிய மலையடிவாரத்திலேயும் விளையாட்டாய் கழிந்தன. படிப்பு,விளையாட்டு,புகை,காதல் என எல்லாமும் பருவங்களுக்கேற்ப மாறினாலும் இடங்கள் மட்டும் மாறவேயில்லை.கூரையை முட்டும் உயரத்திற்குப் புற்றுகொண்ட கருமாரியம்மன் கோவிலைத் தாண்டினால் வரும் பலாக் குளம், தலைப்பிரட்டைகளை மீனெனப் பிடித்த காலத்திலிருந்து ஓர் அந்திக் கருக்கலில் கவிதாவை முத்தமிட்ட தருணம் வரை என்னை அறிந்திருந்தது. எங்கள் குழாமின் அனைத்து... more »

2013-03-05 15:39:10 (5 comments, 0 reshares, 6 +1s)

Angrybird விளையாடிக் கொண்டிருந்தவன் எப்போது புகைப்படம் பகிர்ந்தான் என தெரியவில்லை. லைக்குகளுக்கு நன்றி. 

லக்‌ஷ்மி வேறு நல்ல புகைப்படங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன். 

போகன் மயிரிழையில் தப்பித்தேன் :))

2013-03-03 07:38:19 (3 comments, 0 reshares, 9 +1s)

குட்டி இளவரசன் சொல்றான் ஒரு நாள் அறுபத்து நாலு சூரிய அஸ்தமனத்த பாத்திட்டிருந்தானாம். ஒரு குட்டி இருக்கைல, பூமிக்கு வெளிய, இன்னொரு கிரகத்துல உட்கார்ந்துட்டு பூமிக்குள்ள எங்கலாம் சூரியன் மறையுதோ அங்கலாம் (இருக்கைய மட்டும் லேசா நகர்த்தி போட்டுகிட்டு) பாத்திட்டிருந்தானாம். என் கண் முன்னாலயும் பூமி சுத்திட்டிருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.சலிப்புங்கிற ஒரு விஷயமே இல்லாம பூமியோட எல்லா பாகத்தையும் வேடிக்க பாத்திட்டு இருக்கலாம். பூமில மனுசங்களான நாம பன்ற எல்லாத்தையும் மேல உட்கார்ந்துட்டு ஒருத்தன் பாத்திட்டிருக்கான். அவன் கூட இருக்க இன்னொருத்தன் கைல வச்சிருக்க நோட்ல நாம பன்ற தப்பையெல்லாம் எழுதி வச்சிகிறான். பூமி வாழ்க்க முடிஞ்சி வான வாழ்க்கைக்கு போனதும் நாம பண்ண தப்புக்குஏத்தா மாதிரி தண்டன கொடுப்பான்னுலாம் சின்ன வயசுல நிறைய கதைகள் சொல்லக் கேட்டிருக்கேன். இந்தக் கதைகளில எனக்கு கிளர்ச்சியா இருக்கிறது வான வாழ்க்கைங்கிற கற்பனைதான். வானத்துல போய் வாழ்ந்தா நல்லாருக்கும் இல்ல. சொர்க்கம், நரகம் இரண்டும் வானத்துல இருக்க... more »

2013-03-03 06:19:42 (3 comments, 0 reshares, 6 +1s)

இதெல்லாம் இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல லிசி!..என்னோட நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் தீர்மானங்கள் எல்லாமே என்ன சுத்தின ஒரு புள்ளியில இருந்து தான் ஆரம்பிக்குது.எங்கங்கயோ அலைஞ்சு திரிஞ்சு மீண்டும் அதே புள்ளிலதான் வந்து முடியுது.இத்தன அலைவும் சுத்தலும் என்ன என்னிலிருந்து கூட விடுவிக்க தயாரா இல்ல அப்படிங்கிரதுதான்ஆச்சர்யமா இருக்கு.கடந்து வந்த மனிதர்கள், சூழல், வாழ்வு, படிச்சது, நேசிச்சது,சுத்தினது எதுவுமே என்ன என்னிலிருந்து விடுவிக்கல.அப்பப்ப நான் விடுபட்டதா நெனச்சது கூட சூழலின் மிகையோ அப்படின்னுதான் தோணுது. ஏன் தொடர்ச்சியா என்ன பத்தியே பேசிட்டிருக்கேன் என்ன பத்தியே சிந்திச்சிட்டிருக்கேன் என்ன பத்தியே எழுதிட்டிருக்கேன்னு நீ முகம்சுளிக்கிறியா.இந்த ‘நான்’ ‘என்’ இந்த கருமத்தலாம் கடக்க விரும்புறேன் லிசி.அதோட உன்னையும் அதாவது பெண்ணையும் முழுசா கடக்க விரும்புறேன்.அதான் எப்பவும் ஏதாவது ஒரு பெயர்ல வடிவத்துல பெண் இருக்கா. சிரிக்காதே.ஏன் சிரிக்கிற? உன்ன கடக்க முடியாதுன்னா? இல்ல என... more »

2013-03-03 06:15:04 (0 comments, 0 reshares, 1 +1s)

கன/கரு தேகத்தில் கருநிற மை கொண்டு எழுதுவது சரியாய் தெரியாது. பாஸ்பரஸ் தேகத்திற்கே கருநிற மை.கருநிற உடலுக்கு நீல மைதான்.நீல மை.நீல மைக்குச்சி. அல்லது நீல மையிட்ட எழுதுகோல்.வெற்றுடலின் எப்பகுதியில் இருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம்.நீள வாக்கில், குறுக்குவெட்டில்,வட்டம் வட்டமாய், உடலின் வடிவிற்கேற்ப எழுத தொடங்கலாம்.சந்தியாவின் கன/ரு த்ததேகத்தில் ஓர் இரவு முழுவதும் நீல நிற மையினால் எழுதிக்கொண்டிருந்தேன்.முதுகில் இணுக்கி இணுக்கி ஒன்பது கவிதைகள் எழுதினேன்.பாஸ்பரஸ் தேகத்தவள் போல் இவள் நெளியவோ, கூச்சத்தில் கத்தவோ, சிலிர்க்கவோ இல்லை.அசையாது அமர்ந்திருந்தாள்.நானும் மிக நிதானமாய் எழுதினேன்.சந்தியாவை விட நான் குறைவாகவே குடித்திருந்தேன்.ஆனாலும் ஒவ்வொரு கவிதையைமுடிக்கையிலும் நிதானமிழந்தேன்.அவள் என்னை விட இரு மடங்கு குடித்திருந்தாள் எப்போதும் நிதானம் தவறாதிருந்தாள். முலைகளில் வட்டமாய் என் பெயர் எழுதினேன் .. ”சராசரி இந்திய ஆண் மனோபாவம்” என என் காதில் வழக்கமாய் கத்துகிறவள் கத்தினாள்.'ஆம் ஆண் மனோபாவம்தான்' எ... more »

posted image

2013-02-27 07:58:21 (1 comments, 0 reshares, 7 +1s)

கடைசி நாளில் மழை 2

posted image

2013-02-25 10:36:19 (0 comments, 0 reshares, 12 +1s)

http://ayyanaarv.blogspot.com/2013/02/1.html

2013-02-25 07:11:00 (0 comments, 0 reshares, 9 +1s)

முத்திரை

பேருந்துக்கு
காத்திருப்பவள்
நடனபாவத்துடன்
முந்திக்குள்
விரல்விட்டு
சேலை மடிப்புகளை
நீ..............வி விடுகிறாள்
ஒரு கணம் அனைத்தும்
திகைத்து நகர்ந்தன
மேலிருந்துதான்
பார்த்திருக்க வேண்டும்
கடவுள்
சபாஷ்
சபாஷ்
சபாஷ்
என்றார்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்                  

2013-02-24 07:14:00 (3 comments, 0 reshares, 7 +1s)


Emir kusturica (எமீர் குஸ்தூரிகா?) வின் Underground படம் பார்த்தேன். யுகோஸ்லேவியா – வின் சுதந்திரப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புனைவு. வரலாற்றின் புனைவுத் தன்மை யை எமீர் மிக நேரடியாய் பகடி செய்திருக்கிறார் (புனைவாகவே வரலாறை உருவாக்கி அதை மிக ஆழமாய் பதியவும் செய்வது) படு காட்டமான திரையாக்கம். குரூரமும் பகடியும் பின்னிப் பிணைந்தகரும்படைப்பு. படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஐய்யோ இதையெல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா வா இருந்தார்கள் என்ற எண்ணமும் இடையிடையே வந்துவிட்டுப் போனது. காலையில் விக்கியைத் திறந்தால் Underground ற்கு மிரள வைக்கும் அளவிற்கு எதிர்வினைகள். ஒரு படமாய் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் படம் பேசும் அரசியல் யுகோஸ்லேவியா விற்கு எதிரானது.அந்நிலங்களைப் பற்றிய போதிய அறிவின்மையால் அரசியல் உள்குத்துகள் படம் பார்க்கும்போது என்னைப் பாதிக்கவில்லை. 95 ஆம் வருட "Palme d'Or"  விருது வாங்கிய படம். பிரான்சின் Bernard-Henri Lévy மற்றும் Alain Finki... more »

posted image

2013-02-21 03:48:35 (1 comments, 2 reshares, 5 +1s)

+Ayyanar Viswanath சொன்ன குறும்படம் இதுதான் என்று நினைக்கிறேன். பத்தே பத்து நிமிஷம்தான் ஆனாலும் எவ்வளவோ சமகால விஷயங்களை தொடர்புபடுத்த முடியும். :((

posted image

2013-02-20 08:40:15 (2 comments, 0 reshares, 6 +1s)

http://gulfnews.com/arts-entertainment/celebrity/berlin-film-festival-winner-s-a-scrap-collector-1.1148455

போஸ்னிய படங்களை சமீபமாய் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பே No Mans Land படத்தை பார்த்திருந்தாலும் ஏனோ போஸ்னிய நிலப்பிரதேசங்களுக்கு சினிமாவின் வழியாய் உள்நுழைய முடியவில்லை. இப்போதைக்கு மொத்தம் எட்டு படங்கள் கைவசம் உள்ளன. அதில் 10 மினிட்ஸ் என்றொரு பத்து நிமிடங்கள் ஓடக்கூடியகுறும்படம் ஒன்றைப் பார்த்தேன். அப்படியே உள்ளே விழுந்துவிட்டேன். போஸ்னிய படங்கள் குறித்த அறிமுகம் உள்ள நண்பர்கள் பரிந்துரைகளைத் தரலாம். இதைத் தவிர்த்து ஒரு சினிமாப் புத்தகம் எழுதியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து சினிமா பற்றி பேசவும் எழுதவும் இருக்கிறேன். தமிழில் பரவலாய் சென்று சேராத அபூர்வசினிமாக்களை குறித்து எழுதுவதுதான் இலக்கு. பார்ப்போம்.... more »

2013-02-18 08:19:15 (66 comments, 0 reshares, 31 +1s)

சொல்லாமல் இருக்கவே முடியவில்லை நானும் நேற்றிலிருந்து மிகவும் கட்டுப்படுத்திப் பார்த்துவிட்டேன் ஆனால் சில விமர்சனங்களைப் படித்து திகிலாகி, மிரண்டு இதை சொல்லியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு இப்போது வந்திருக்கிறேன். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, தாந்தே, ஏசப்பா, ஆறு வடிவங்கள் ஏழு ஸ்டெப்புகள் எட்டாயிரம் குறியீடுகள் ஐயகோ! இதெல்லாம்மணிரத்னம், ஜெயமோகன், ரஹ்மான், ராஜீவ்மேனன் போன்ற பெயர்களை போஸ்டரில் காணும்போதே வந்துவிடுகிறதா? இதையெல்லாம் தவிர்த்துவிட்டு கடல் படத்திற்குள் சினிமாவை மட்டுமே ரசிக்கும் ரசிகனாய் உள்நுழைந்த எனக்கு கிடைத்தது சில நல்ல தருணங்களும் பல மோசமான தருணங்களும்தான். மோசமான தருணங்கள் முதலில்

1. படத்தின் துவக்கமே என்னை பீதியடையச் செய்தது.கைவிடப்பட்ட சிறுவனின் வீதி அலைவுகளுக்குப் பின்னால் ஒலிக்கும் இசை/பாடல் (சின்மயி ரகசியமான குரலில் நான் உன்ன அடிப்பேன். நான் மகுடி நீ பாம்பு என்றெல்லாம் அனத்தும்) ஆடியோவில் கேட்க நல்ல பாடல்தான் ஆனாலும் அதற்கும் படத்திற்கும் மயிரளவிற்கு கூட சம்ப... more »

Buttons

A special service of CircleCount.com is the following button.

The button shows the number of followers you have directly in a small button. You can add this button to your website, like the +1-Button of Google or the Like-Button of Facebook.






You can add this button directly in your website. For more information about the CircleCount Buttons and the description how to add them to another page click here.

Ayyanar ViswanathTwitterFacebook